சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக மாநில பொதுச்செயலாளரான கே.டி.ராகவன், கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். கடந்த வாரத்தில் அவருக்கு திடீரென காய்ச்சல் வந்ததையடுத்து, கரோனா கண்டறிதல் சோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.
பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவனுக்கு கரோனா! - கரோனா
சென்னை: பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
bjp
இந்நிலையில், தற்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராகவன் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பாதித்த நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதய நோயாளிகள் 5,390 பேர் குணம்!