சென்னையிலுள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. அப்படியே அதை எதிர்க்க வேண்டுமென்றாலும் அது, ஜனநாயக முறையிலான போராட்டமாகத்தான் இருக்க வேண்டும். அனுமதி இல்லை என்ற இடங்களில் காவல் துறை மீது தாக்குதல் நடத்துவது சரியல்ல. அரசியல் சுயலாபத்திற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இந்தப் போராட்டங்களை ஊக்கப்படுத்தி வருகிறார். தேர்தல்வரை தமிழ்நாட்டை போராட்டக்களமாக வைத்திருக்கவே அவர் திட்டமிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் அமைதி நிலவ அவர் விரும்பவில்லை.
’தமிழ்நாட்டில் அமைதி நிலவ ஸ்டாலினுக்கு விருப்பமில்லை’ - பாஜக - மு.க.ஸ்டாலின்
சென்னை: தேர்தல்வரை தமிழ்நாட்டை போராட்டக்களமாக வைத்திருக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிடுவதாக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்த காவல் துறை அனுமதி மறுக்கக்கூடாது. மார்ச் 20ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை "ஊருக்குச் செல்வோம் உரக்கச் சொல்வோம்" என்ற நிகழ்ச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மாநிலம் முழுவதும், நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக நடத்திய கையெழுத்து இயக்கம் போலியானது. அப்படி அது உண்மை என்றால் அதற்குரிய ஆதாரத்தை ஆதார் அட்டையுடன் சமர்ப்பிக்கட்டும் “ என்றார்.
இதையும் படிங்க: ' மிஸ்டர் ஸ்டாலின்! கருணாநிதியின் மகன் என்ற தகுதியைத் தவிர உங்களிடம் வேறு என்ன இருக்கிறது'