தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சூர்யாவை விவாதத்துக்கு அழைக்கும் பாஜக - சூர்யாவை பொதுவிவாதத்துக்கு அழைக்கும் பாஜக

ஒன்றிய அரசை கண்மூடித்தனமாக எதிர்ப்பதை விடுத்து, நீட் தேர்வு குறித்த பொதுவிவாதத்துக்கு நடிகர் சூர்யா முன்வர வேண்டும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

நடிகர் சூர்யா, கரு நகராஜன்
நடிகர் சூர்யா, கரு நகராஜன்

By

Published : Jul 5, 2021, 6:28 PM IST

சென்னை: தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் இன்று (ஜூலை 5) செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேர்தலுக்காகவும், அரசியலுக்காகவும் விளையாட்டில் ஈடுபடுவது திமுகதான்.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய வேண்டிய அவசியமே இல்லாத நிலையில், அதற்காக குழு அமைத்திருக்கிறது. வரும் ஜூலை 8ஆம் தேதி இந்த குழு தொடர்பான தனது பதிலை ஒன்றிய அரசு தாக்கல் செய்யும்.

எடுத்த எடுப்பிலேயே கண்ணை மூடிக்கொண்டு ஒன்றிய அரசை எதிர்ப்பதால் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சூர்யாவுடன் பொது விவாதத்துக்கு பாஜக எப்போதும் தயாராக உள்ளது, அதற்கு சூர்யா முன்வர வேண்டும்

மாநில அரசு விட்டுக்கொடுக்கவும்

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100க்கு விற்பனையாகும்போது, அதிலிருந்து ரூ.25 மாநில அரசுக்கு செல்கிறது. இதை விட்டுத்தந்து மாநில அரசு பெட்ரோல் விலையைக் குறைக்கலாம்" என்று யோசனை வழங்கியுள்ளார்.

பின்னர் தொடர்ந்த அவர், "பெட்ரோலிய பொருட்களின் வரி வருவாயில்தான் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குகிறது. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடிகர் சூர்யாவை குறி வைக்கும் பாஜக!

ABOUT THE AUTHOR

...view details