சென்னை:பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வர இருக்கிறார். இந்நிலையில் காலை முதலே திமுக - பாஜக வை சேர்ந்த தொண்டர்கள் அரங்கத்திற்க்குள் இரு பகுதிகளில் அமர்ந்துள்ளனர்.
'ஒருபுறம் பாரத் மாதா கி ஜெ... மறுபுறம் கலைஞர் வாழ்க..!' - திக்குமுக்காடிய நேரு அரங்கம்! - DMK
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வரவிருக்கிறார். இந்நிலையில் அரங்கத்தில் திடீரென போட்டி போட்டுக்கொண்டு கோஷமெழுப்பிய திமுக - பாஜகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக திமுக தொண்டர்கள் கூச்சல்
அப்போது பாஜக வினர் ”பாரத் மாதா கி ஜே” என கோஷங்கள் எழுப்பினர், பின்னர் இதற்கு போட்டியாக திமுக தொண்டர்கள் ”கலைஞர் வாழ்க” என கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால்அங்கு சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:பிரதமர் சென்னை வருகை: பாதுகாப்பில் 22 ஆயிரம் போலீசார்