சென்னைகொருக்குப்பேட்டை கார்நேசன் நகரைச் சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர், கடந்த மார்ச் 20ஆம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துமனை ரவுண்டானாவில் இருந்து, மூலக்கொத்தளத்திற்கு பைக் ரேஸில் சென்றுள்ளனர்.
புதிதாக பிடிபட்ட 3 பேர் - மீண்டும் வார்டு பாய்களுக்கு உதவக்கோரி நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் - விபத்து மற்றும் சிகிச்சை பிரிவில் பணியாற்ற வேண்டும்
பைக் ரேஸில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட மூவருக்கு, ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில், வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சார்லஸ் அளித்தப்புகாரின் பேரில், பாலாஜி, ஹரீஷ்குமார், சல்மான்கான் ஆகியோரை புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மூவரும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, "கடந்த சில நாட்களுக்கு முன்பு, பைக் ரேஸில் ஈடுபட்டு கைதான பிரவீனுக்கு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில், ஒரு மாத காலம் வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்ற வேண்டும் எனவும், அதுகுறித்து மருத்துவமனை டீனுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளை, இந்த மூவரும் பின்பற்ற வேண்டும்' என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.