தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Bike Caught Fire: சென்னை பிரதான சாலையில் கொளுந்துவிட்டு எரிந்த பைக் - பல்லாவரம்

சென்னையை அடுத்த பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Bike caught fire in chennai, GST road Chennai, சென்னையில் நடுரோட்டில் எரிந்த பைக்
Bike Caught Fire

By

Published : Nov 22, 2021, 8:59 AM IST

சென்னை: புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இறைச்சி கடை வியாபாரி சித்திக். இவர், குரோம்பேட்டையில் உள்ள உணவு விடுதிக்கு நேற்று (நவம்பர் 20) காலை இருசக்கர வாகனத்தில் இறைச்சியைக் கொண்டு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென இருசக்கர வாகனத்தில் தீப்பற்றியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த சித்திக் உடனடியாக வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, இறைச்சி பையை எடுத்துக்கொண்டு தூரமாக ஓடியுள்ளார்.

ஜிஎஸ்டி சாலையில் கொளுந்துவிட்டு எரிந்த இருசக்கர வாகனம்

இதையடுத்து, சற்று நேரத்தில் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. இந்தத் தகவல் அறிந்துவந்த தாம்பரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இது குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: Affection: ஈன்ற குட்டியைப் பிரித்ததாக நினைத்த தாய் எருமையின் பாசப்போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details