தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஏப்.16, பகத் பாசிலின் 'நிலை மறந்தவன்' ட்ரெய்லர் வெளியீடு - தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ்

மலையாளத்தில் ஹிட்டடித்த பகத் பாசிலின் படம் நிலை மறந்தவன் என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஏப்.16ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

பஹத் பாசிலின்
பஹத் பாசிலின்

By

Published : Apr 10, 2022, 7:04 PM IST

நடிகர் பகத் பாசில் நடிப்பில் தமிழில் அடுத்து வெளியாகவுள்ள படம், 'நிலை மறந்தவன்'. இந்தப் படத்தில் பகத் பாசிலின் மனைவியும் ராஜா ராணி, நையாண்டி படங்களின் கதாநாயகியுமான நஸ்ரியா ஜோடியாக நடிக்கிறார்.
கௌதம் வாசுதேவ் மேனன், கோலிசோடா-2 செம்பான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க, திமிரு விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மலையாளத்தில் 'ட்ரான்ஸ்' என்கிற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலி கும்பல். படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமலேயே இந்த மோசடிக்கு துணை போகிறான்.
ஒருகட்டத்தில் உண்மை தெரிய வரும்போது அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை. படத்தை அன்வர் ரஷீத் இயக்க, ஜாக்ஸன் விஜயன்- சுஷின் ஷ்யாம் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஏப்-16ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details