தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”திறந்தநிலை பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி மூலம், இளம் கல்வியியல் (பி.எட்.) பட்டப்படிப்பை 2 ஆண்டுகள் படிக்க, தேசிய ஆசிரியர் கல்வியியல் கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளன.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பி.எட். படிப்பு! - பி.எட். தொலைநிலைக் கல்வி
சென்னை: பி.எட். தொலைநிலைக் கல்வியில் சேர்வதற்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
university
அதனடிப்படையில் 2020-21 ஆம் கல்வியாண்டில் பி.எட். படிப்பில் சேர, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. வகுப்புகள் மே மாதம் தொடங்கும். பி.எட். படிப்பில் தமிழ் வழியில் 500 பேர், ஆங்கில வழியில் 500 பேர் என 1,000 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். மேலும் விவரமறிய, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக இணையதளத்தை காணலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கு ஒத்திவைப்பு