தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொறியியல் படிப்பு சான்றிதழ் பதிவு செய்ய கால நீட்டிப்பு: தரவரிசைப் பட்டியல் 25ஆம் தேதி வெளியீடு - Extension of time to register for Engineering Study Certificate

minister
minister

By

Published : Sep 16, 2020, 8:01 PM IST

Updated : Sep 16, 2020, 10:11 PM IST

19:57 September 16

சென்னை: பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வருகின்ற 25ஆம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவிப் பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான இணையதள பதிவு முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் நம்பர் ஆகஸ்ட் 26ஆம் தேதி வழங்கப்பட்டது. கரோனோ பரவல் காரணமாக மாணவர்களை நேரில் அழைக்காமல் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் வாயிலாக திறமை வாய்ந்த பேராசிரியர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முன்னாள் ராணுவத்தினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரி பார்த்து வருகின்றனர்.

பெரும்பான்மையான மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. இன்னும் சில மாணவர்கள் சரியாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கேட்டுள்ளனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட வேண்டிய தரவரிசைப் பட்டியல் 25ஆம் தேதயன்று வெளியிடப்படும். 

மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தங்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-22351014 மற்றும் 044 -22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க:நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் பொறியியல் பட்டதாரி!

Last Updated : Sep 16, 2020, 10:11 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details