லெபனானில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நிகழ்ந்த பெரும் விபத்தின் எதிரொலியாக, சென்னை மணலியில் உள்ள அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை, கிடங்கில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 10 கண்டெய்னர்களில் அமோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், “மணலியில் எஞ்சியுள்ள 27 கண்டெய்னர் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை, 2, 3 நாட்களில் அப்புறப்படுத்தும் பணியில் சுங்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அங்கு தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, அப்பகுதி மக்கள் அச்சமின்றி இருக்கலாம் “ என்றார்.