தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிஆர்க் படிப்பு: 1180 காலி இடங்கள் - ஆதிதிராவிடர் பிரிவு மாணவர்கள்

பிஆர்க் பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வில் 695 பேர் சேர்ந்துள்ள நிலையில், இன்னும் 1180 இடங்கள் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளது.

பிஆர்க் படிப்பில் 1180 இடங்கள் காலி
பிஆர்க் படிப்பில் 1180 இடங்கள் காலி

By

Published : Nov 1, 2021, 10:34 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஆர்க் பட்டப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் பெற்றது.

அப்பொழுது, 3015 மாணவர்கள் பதிவு செய்தவர்களில், 1467 மாணவர்கள் கட்டணங்களை செலுத்தினர். இவர்களில் தகுதியான 1152 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 47 பொறியியல் கல்லூரிகளில் பிஆர்க் படிப்பில் உள்ள 1875 இடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 3 பேர் விண்ணப்பித்தனர்.

அவர்களில் 2 மாணவர்களும், விளையாட்டுப் பிரிவில் விண்ணப்பித்த 25 மாணவர்களில் 6 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் விண்ணப்பித்த 12 மாணவர்களில் ஒரு மாணவரும், மாற்றுத்திறனாளிப் பிரிவில் விண்ணப்பித்த 2 மாணவர்களும் என 11 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

இதனையடுத்து, பொதுப்பிரிவு கலந்தாய்வில் 684 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர். பிஆர்க் படிப்பில் சேர 695 மாணவர்கள் இடங்களை தேர்வுச் செய்துள்ள நிலையில், இன்னும் 1180 இடங்கள் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளது.

மேலும், ஆதிதிராவிடர், அருந்ததியர் பிரிவில் நிரம்பாத இடங்களில் ஆதிதிராவிடர் பிரிவு மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு இன்று(நவ.01) நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சரவெடி சத்தம் தெறிக்க...தெறிக்க...வெளியான 'அண்ணாத்த' பாடல்கள்!

ABOUT THE AUTHOR

...view details