தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு - சரமாரி வெட்டி கொலை

சென்னை: பாடியில் ஆட்டோ டிரைவரை வெட்டிக் கொல்ல முயற்சித்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

By

Published : Mar 2, 2021, 9:06 AM IST

சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி, அயோத்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (27). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று காலை அதே பகுதியிலுள்ள, வன்னியர் தெருவில் ஆட்டோவுடன் சவாரிக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்குகளில் 4பேர் கொண்ட கும்பல் வந்திறங்கி அருண்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அக்கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியதில், தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அருண்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தப் புகாரின் அடிப்படையில், கொரட்டூர் காவல் ஆய்வாளர் பொற்கொடி தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பாடி, பஜனை கோயில் தெருவைச் சார்ந்த கோபிநாத் (24) என்பவருக்கும், ஆட்டோ டிரைவர் அருண்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் கோபிநாத், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அருண்குமாரை வெட்டி கொல்ல முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து கோபிநாத் உள்பட அனைவரையும் தேடிவந்தனர். இந்நிலையில், இன்று காலை முக்கிய குற்றவாளியான கோபிநாத் (24) மற்றும் அவரது கூட்டாளிகளான அயப்பாக்கத்தை சேர்ந்த அஜித்குமார் (22), பாடி -முகப்பேர் சாலையைச் சேர்ந்த ராஜ்குமார் (22), பாடி, வன்னியர் தெருவைச் சார்ந்த ஜீவானந்தம்(22) ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர், அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஆட்டோவில் வந்த அருண்குமாரை நோட்டமிடுவதும், பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்து தயார்படுத்தி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. தொழிற்சாலை மிகுந்த சென்னை கொரட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் கொலை கொல்லை, வழிப்பறி போன்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

இதையும் படிங்க:பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கொடூரக்கொலை: வெளியான சிசிடிவி

ABOUT THE AUTHOR

...view details