சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகர் 6ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அப்புன்ராஜ் (42). இவருக்கும் இவரது மனைவி தேவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேவி பிரிந்து தனியாக வாழ்ந்துவருகின்றார்.
இதனையடுத்து, அப்புன்ராஜ், சரண்யா, சந்தியா ஆகிய இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் பக்கத்து வீட்டில் வாழ்ந்துவந்தனர்.
நேற்று முன்தினம் (செப். 27) மாலை இரண்டு மனைவிகளும் கணவர் அப்புன்ராஜுவுடன் சண்டையிட்டு அவர்களது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று (செப். 28) மாலை தனது பெரியப்பா வீட்டிற்குச் சென்ற அப்புன்ராஜ் தனது மனைவி பிரிந்து சென்றதற்கு தாங்கள்தான் காரணம் என பெரியப்பா வேலுச்சாமி (82), அவரது மகன் ரவீஸ்வரன் (54) ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.