சென்னை செம்பாக்கம் திருமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் 35. இவருக்கு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து ராகவி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் கடந்த 2வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மனைவி இறந்துவிட்டார்.பின்னர் 1 வருடத்திற்கு முன்பு சூரியகலா (29) என்ற பெண்ணை பார்த்திபன் திருமணம் செய்துள்ளார்.பின்னர் இவர்களுக்கு 1 வயதில் குழந்தை உள்ளது.
6 வயது சிறுமியை மாடியிலிருந்து தூக்கி வீசி கொடூரக் கொலை செய்த சித்தி! - crime
சென்னை: செம்பாக்கம் பகுதியில் ஆறு வயது குழந்தையை மாடியிலிருந்து தூக்கி வீசி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக சூரியகலாவிற்கு முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தை ராகவியை பிடிக்காமல் பார்த்திபனுடன் பலமுறை தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சிறுமியைக் காணவில்லை எனப் பார்த்திபனுக்கு சூரியகலா போன் செய்துள்ளார். இதனால் பார்த்திபன் வீட்டில் வந்து தேடும்போது மாடியிலிருந்து ராகவி விளையாடும் போது கீழே விழுந்து விட்டதாக சூரியகலா கூறியுள்ளார்.
பின்னர் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பார்க்கும்போது ஏற்கெனவே சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இதனால் சந்தேகமடைந்த பார்த்திபன் தன் மனைவி மீது சந்தேகம் உள்ளதாகக் கூறி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இப்புகாரின் அடிப்படையில் சூரியகலாவிடம் விசாரணை நடத்திய போது சிறுமியை 2வது மாடியிலிருந்து தூக்கி வீசியதாகத் தெரியவந்தது. மேலும் சிறுமிக்கு பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.