தங்கத்தின் விலை கடந்த நான்கு நாள்களாக குறைந்து வருவதால், நகைக்கடையில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 4,373 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 34,984-க்கு விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 4,737 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 37,896-க்கு விற்பனையாகிறது.