நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காவல் துறை மானியக் கோரிக்கையின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் காவல் துறையில் கழிவுசெய்யப்பட்ட காவல் வாகனங்களை ஏலம்விடும் முறையை எளிமையாக்கி சம்பந்தப்பட்ட ஆணையர், கண்காணிப்பாளர்களுக்கு ஏலமிடும் அதிகாரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில் முதற்கட்டமாகத் தமிழ்நாட்டிலுள்ள ஐந்து மாவட்டங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட உரிமை கோராத வாகனங்கள், மதுவிலக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை பொது ஏலம்விட்டு அரசுக் கணக்கில் பணத்தைச் சேர்த்திட மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
- திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 172 வாகனங்கள்,
- தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 135 வாகனங்கள்,
- கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 207 வாகனங்கள்,
- சேலம் மாவட்டத்தில் உள்ள 103 வாகனங்கள்,
- மதுரை மாவட்டத்தில் உள்ள 203 வாகனங்கள்,
- திருப்பூர் மாநகர காவல் துறையில் உள்ள 117 வாகனங்கள்