தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் அணிவகுப்பு - விமானி பயிற்சியை நிறைவு செய்த 859 வீரர்கள்

தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில், பயிற்சியை நிறைவு செய்த வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த 859 வீரர்கள்
தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த 859 வீரர்கள்

By

Published : May 7, 2022, 11:04 AM IST

சென்னை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் கடந்த 64 வாரங்களாக 859 வீரர்கள் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில் வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சி தாம்பரம் விமானப்படை மையத்தில் நடைபெற்றது.

இதனை தொழில்நுட்ப பயிற்சி அலுவலர் உதய் சாவ்லா நேரில் பார்வையிட்டு அணிவகுப்பை மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பயிற்சியை நிறைவு செய்த வீரர்களுக்கு விருதுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த 859 வீரர்கள்

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய உதய் சாவ்லா , "புதிதாக பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் அனைவரும் செய்த உடற்பயிற்சி சாகசங்கள் நன்றாக இருந்தது. தற்போது ராணுவ விமான தளத்தில் அதிநவீன விமானங்கள்,ஆயுதங்கள், உபகரணங்கள் புதுமையான வகையில் வந்து கொண்டிருக்கின்றன.

தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த 859 வீரர்கள்

புதிதாக பயிற்சி நிறைவு செய்தவர்கள் தங்கள் கற்றுக்கொண்ட பயிற்சியை சிறந்த முறையில் பயன்படுத்தி தொழில்நுட்ப முறையில் சிறப்பிக்க பாடுபட வேண்டும்.

தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த 859 வீரர்கள்

மேலும் தற்போதுள்ள கால கட்டத்திற்கு போல் தங்களை தாங்களாகவே மாற்றிக் கொள்வதன் மூலம் உங்களது அறிவு திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கும். பணியில் இணைந்த பிறகு சேவையை நெறிமுறை கடைப்பிடித்து பணியாற்ற வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த 859 வீரர்கள்

இதையும் படிங்க:தீண்டாமை வன்கொடுமைகளில் மதுரை முதலிடம் - அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details