தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்டப்பேரவை கூட்டம் மூன்று நாட்கள் மட்டுமே! - அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

சென்னை: சட்டப்பேரவை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறும் என பேரவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.

session
session

By

Published : Feb 2, 2021, 3:56 PM IST

Updated : Feb 2, 2021, 5:16 PM IST

இந்த ஆண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கூட்டம் முடிந்ததும், பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் கூடிய அலுவல் ஆய்வுக்குழுவில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேரவைத் தலைவர் தனபால், வரும் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

இது தொடர்பாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நாளை (3.2.2021, புதன்கிழமை) சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் மறைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மருத்துவர் சாந்தா ஆகியோரின் மறைவிற்கு இரங்கற் குறிப்புகள் வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

சட்டப்பேரவை கூட்டம் மூன்று நாட்கள் மட்டுமே!

நாளை மறுநாள் (4.2.2021, வியாழக்கிழமை) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மொழியப்பெற்று விவாதம் தொடங்கும். வரும் 5.2.2021 வெள்ளிக்கிழமை அன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பதிலுரையும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப்பு! - மு.க.ஸ்டாலின்

Last Updated : Feb 2, 2021, 5:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details