சென்னை:தாம்பரம் அடுத்த பொத்தேரியைச் சேர்ந்த, 22 வயது இளம்பெண், திருமணமாகி கணவனை இழந்து, தனியாக வசித்துவருகிறார். இந்த நிலையில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அவரது மாமன் மகன் (22) என்பவருடன் 2019ஆம் ஆண்டு நட்பாகப் பழகிவந்துள்ளார்.
நாளடைவில் இருவரும், காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அந்த இளைஞர் அவருடன் பலமுறை தவறான உறவில் இருந்துள்ளார். நாளடைவில் இதைப்பற்றி இளைஞரின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இளைஞரிடம், அப்பெண்ணுடன் பழகுவதைக் கண்டித்துள்ளனர். மேலும் இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ளக் கூடாது எனக் கூறியுள்ளனர். இதனால் இளைஞர் அந்தப் பெண்ணுடன் பேசாமல் இருந்துள்ளார்.