சென்னை வேப்பேரியைச் சேர்ந்த அருண்பிரசாத் (29) புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணிபுரிந்துவந்தார். அவருக்கும் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கஞ்சா கடத்தல் கும்பலுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இத்தொடர்பால் கஞ்சா பழக்கத்துக்கு காவலரும் அடிமையாகியிருந்தார். இதற்கிடையில் அன்னை சத்யா நகரில் கஞ்சா விற்பனை நடப்பது காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அக்.20ஆம் தேதி அப்பகுதியில் சோதனை நடத்தியபோது 17 வயது சிறுவன், ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ்குமார் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.