அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத் தேர்தல் பரப்புரையின் போது கமல்ஹாசன் மீது முட்டை, செருப்பு ஆகியவைகள் வீசப்பட்டன. இதுகுறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'முட்டை, செருப்பு வீச்செல்லாம் ஒரு பரீட்சை'-கமல் - முட்டை, செருப்பு வீச்சு
சென்னை: 'நிகழும் சம்பவங்கள், நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரீட்சை' என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கும் ரசிகர்களுக்கும் தனது ட்விட்டர் வாயிலாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
'முட்டை, செருப்பு வீச்செல்லாம் ஒரு பரிட்சை'-கமல்
"மக்கள் நீதி மய்யம் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரீட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர்! அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.