கோயம்பேட்டில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ”திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா முதலமைச்சர் பிறப்பு குறித்து பேசியது மோசமானது. இதற்கு முன் சசிகலாவை இதுபோன்று உதயநிதி விமர்சித்தார். எனவே, ஆ.ராசாவை திமுக தலைமை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும். பொது வெளியில் தவறாகப் பேசிய ஆ.ராசா மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்படும். அக்கட்சியின் லியோனிக்கும் இது பொருந்தும்.
திமுகவிலிருந்து ஆ.ராசாவை நீக்க வேண்டும்! - பாஜக - பாஜக
சென்னை: தாய்மையை இழிவாக பேசியதற்காக திமுகவிலிருந்து ஆ.ராசாவை நீக்க வேண்டும் என பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வலியுறுத்தியுள்ளார்.
bjp
வரும் 30 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் முன்னிலையில், மாற்றுக் கட்சிகளில் இருந்து ஏராளமானோர் பாஜகவில் இணைகின்றனர். திமுக ஆதரவள்ளாத ஊடகங்கள் அதிமுகவிற்கு சாதகமாக தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளதால் திமுக கலக்கத்தில் உள்ளது. அதன் வெளிப்பாடால்தான் பெண்களை தரக்குறைவாக அவர்கள் பேசி வருகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: ’முதலமைச்சரை ஒருபோதும் கொச்சைப்படுத்தி பேசவில்லை’