Gold Rate சென்னை: கடந்த மூன்று நாள்களாக தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 அதிகரித்தும், சவரனுக்கு ரூ.264 அதிகரித்தும் விற்பனையாகிறது.
அதன்படி கிராமுக்கு ரூ.5,047 ஆகவும், சவரனுக்கு ரூ.40,376 ஆகவும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,446-க்கும், சவரனுக்கு ரூ.43,568-க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40,112-க்கு விற்பனையானது.
வெள்ளி விலை:வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்தும், கிலோ வெள்ளிக்கு ரூ.1,000 அதிகரித்தும் காணப்படுகிறது. ஆக வெள்ளி விலை கிராமுக்கு ரூ.75.20-க்கும், கிலோ வெள்ளி ரூ.75,200-க்கும் விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி கிலோ வெள்ளி விலை ரூ.74,200-க்கு விற்பனையானது.
இதையும் படிங்க: 'சென்னை, மும்பை உள்பட முக்கிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை!'