தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலத்துறையில், இன்று (ஆக. 10) 24 இளநிலை உதவியாளர் பணியமர்த்தப்பட்டனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான இவர்களுக்கு பணியாணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொழிலாளர் நலத்துறையில் 24 இளநிலை உதவியாளர்கள் நியமனம் - தொழிலாளர் நலத்துறை
சென்னை : தொழிலாளர் நலத்துறையில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 24 இளநிலை உதவியாளர்களுக்கு அமைச்சர் நிலோஃபர் கபீல் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
order
இதில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நிலோஃபர் கபீல் கலந்து கொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்வில், கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் முகமது நசிமுதீன், தொழிலாளர் ஆணையர் முனைவர் இரா.நந்தகோபால் ஆகியோரும் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:ரயில்வேயில் தனியாரை அனுமதிப்பதா? - ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்