தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை!

சென்னை: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தின்போது தவறு செய்யும்  ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

exam

By

Published : Mar 17, 2019, 12:19 PM IST

தமிழ்நாட்டில்மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தத் தேர்வினை எட்டு லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவர்கள் மற்றும்தனித்தேர்வர்கள்உட்பட எட்டு லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதிவருகின்றனர்.

தமிழ், ஆங்கிலம், ஃபிரெஞ்ச், மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிப்பாடங்களான விடைத்தாள் திருத்தும் பணியை முதன்மை விடைத்தாள் திருத்துபவர்கள் (முதுகலை ஆசிரியர்களில் அனுபவமிக்கவர்கள்)மார்ச் 29ஆம் தேதி மேற்கொள்வார்கள்.

அப்போது அரசுத் தேர்வுத்துறையால் அளிக்கப்படும் விடைக்குறிப்பில் (கீ-ஆன்சர்) தவறுகள் இருந்தால் தேர்வுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, அதில் மாற்றம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து உதவி விடைத்தாள் திருத்துபவர்கள் (முதுகலை ஆசிரியர்கள்) மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை விடைத்தாள்களை திருத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பில் பிற பாடங்களுக்கான விடைத்தாள்களை 29-ம் தேதி முதன்மை விடைத்தாள் திருத்துபவர்களும் மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரையில் உதவி விடைத்தாள் திருத்துபவர்களும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் உதவி விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் மேற்கொள்ளவேண்டிய விதிமுறைகளை அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அதன்படி, "மதிப்பீட்டுப் பணிக்கு காலை சரியாக 8.30 மணிக்கு மைய மதிப்பீட்டு முகாமிற்கு வருகைபுரிதல் வேண்டும்.

முதன்மைத் தேர்வாளரிடம்விடைத்தாள் உறையை பெற்றுக்கொண்டு பகிர்மானப் பதிவேட்டில் பதிய வேண்டும். உதவித் தேர்வாளர்கள் சிவப்பு நிற மையினை மட்டுமே மதிப்பீட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.உதவித் தேர்வாளர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட உறையில் சரியான எண்ணிக்கையில் விடைத்தாள்கள் உள்ளதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். உறையின் மேல்பக்கத்தில்தனது உதவித் தேர்வாளர் எண், தேதி, பிரிவு வேளை எனக் குறிப்பிட்டு கையொப்பமிட வேண்டும்.

மதிப்பீட்டுப் பணி மேற்கொள்ளும் முன்னர் விடைத்தாள்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதனையும், விடைத்தாள்கள் ஒவ்வொன்றிலும் அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என்றும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் முதன்மைத் தேர்வாளரின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.

உதவித் தேர்வாளர்கள் விடைத்தாளில் எந்தக் குறைபாடு ஏற்பட்டாலும் அக்குறைபாட்டை முதன்மைத் தேர்வாளர்களின் கவனத்திற்கு கொண்டு வராவிடில், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு உதவித் தேர்வாளரே முழுப்பொறுப்பேற்க நேரிடும்.

சிவப்பு நிற மையினால் மட்டுமே மதிப்பீட்டுப் பணியினைத்தொடங்க வேண்டும். விடைக்குறிப்பின் அடிப்படையில் விடைத்தாள் திருத்தப்பட வேண்டும். விடைக்குறிப்பின்படி வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச மதிப்பெண்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

அனைத்துப் பக்கங்களிலும் உள்ள அனைத்து விடைகளும் எதுவும் விடுபடாமல் முழுவதும் சரியாக திருத்தப்பட வேண்டும். தேர்வர் விடை எழுதிய கடைசி வரியின் கீழ் தேர்வுத்துறையின் முத்திரை இடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே உதவித்தேர்வாளர் மதிப்பீட்டுப் பணியினை மேற்கொள்ள வேண்டும் .

மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு எழுதாத பக்கங்களுக்கு குறுக்கு கோடு இடவேண்டும். விடை எழுதாமல் வினா எண் மட்டுமே எழுதியிருந்தால் சிவப்பு மையினால் கோடிட வேண்டும்.

புவியியல், வரலாறு, வணிகக் கணிதம் ஆகியவற்றில் உள்ள இணைப்புகள்விடுபடாமல் கண்டிப்பாக பார்த்துத் திருத்த வேண்டும். மதிப்பெண்ணை முதல் பக்கத்தில் அதற்குரிய கட்டத்திற்குள் தெளிவாக எழுத வேண்டும்.

உதவித்தேர்வாளர் நிலையில் ஏற்படும் தவறுகள் விடைத்தாள் நகல் பெறுதல்,மறுகூட்டல் போன்றவற்றின்போது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details