சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம், ” தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் அறிக்கை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளன. அதில், லஞ்சத்தை ஒழிப்பதற்கு என்ன வாக்குறுதிகள் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் வெளியிட்டுள்ளோம். ஊழல் ஒழிப்புக்கான மாற்றாக நாங்கள் மூன்று விசயங்களை முன்வைத்துள்ளோம்.
(1) வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை உறுதி செய்ய வேண்டும்:
- அதில் தகவல் உரிமை சட்டத்தை ஆன்லைனில் கொண்டு வர வேண்டும்.
- டெண்டர்களை முழுக்க மின்னணுவாக்க வேண்டும்.
- டெண்டர் விடுவதற்கு முன்பு அதிகாரிகளை யாரும் சந்திக்க முடியாத அளவுக்கு திருத்தம் கொண்டு வர வேண்டும்.
- ஊழல் விசாரணையை நடத்த உயர் அதிகாரியின் அனுமதி தேவை என்ற கூற்றை அகற்ற நாடாளுமன்றத்தில் அழுத்தம் தர வேண்டும்.
- கிரானைட், தாது மணல் மற்றும் சட்டவிரோத மணல் கடத்தல் ஆகியவை மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(2) ஊழல் தடுப்பு இயக்கங்களை தன்னிச்சையாக மாற்ற வாக்குறுதி அளிக்க வேண்டும்:
- தமிழ்நாடு லோக் ஆயுக்தாவை தன்னிச்சையான விசாரணை அமைப்பாக ஆக்க தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் 2018ல் சட்டத் திருத்தங்கள் செய்ய வேண்டும்.
- அரசியல் கட்சிகள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வர வேண்டும்.
- அரசியல் கட்சி செலவில் உற்ற, பெற்ற தொகை நிர்ணயம் செய்ய வேண்டும்.