சென்னை : பொறியியல் மாணவர்களுக்கான பருவத்தேர்வு (செமஸ்டர்) வரும் டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு முதல் கரோனா தொற்று காரணமாக அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற்று வந்தன.
Anna University Semester exam: பொறியியல் மாணவர்களுக்கு டிச.13 முதல் பருவத்தேர்வு - Anna University Semester
டிசம்பர் 13-ஆம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கான பருவத்தேர்வு (செமஸ்டர்) தொடங்குகிறது.
இந்த ஆண்டு மார்ச் ஏப்ரல் பருவத் தேர்வுகள் வரை ஆன்-லைன் வழியில் தேர்வுகள் நடைபெற்றன. தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில் வருகின்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாத பருவத் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஆக, அகமதிப்பீடு தேர்வு பருவத் தேர்வு என்று அனைத்தும் நேரடியாகவே நடைபெறும். இது தொடர்பான விரிவான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க :'சமுதாயத்திற்கு பயன்படும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்' - அண்ணா பல்கலை துணைவேந்தர்