கரோனா பரவல் காரணமாக மாணவர்களை நேரடியாக கல்லூரிகளுக்கு வரவழைத்து தேர்வுகளை நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து, அரியர் தேர்வெழுத கட்டணம் செலுத்தியுள்ள மற்ற ஆண்டுகளில் பயிலக்கூடிய அனைத்து அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடம் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டது. அதற்கு, தேர்வு வைக்காமல் அரியர் மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் போதும், தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என தெரிவித்திருந்தது.