தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் வசந்தவாணன் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அசல் சான்றிதழ்கள் கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி எக்காரணம் கொண்டும் பேராசிரியர்களின் சான்றிதழ்களை முடக்கிவைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மேலும் அசல் சான்றிதழ்களை உடனடியாகப் பேராசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பணியாற்றும் பேராசிரியர்களின் மன அழுத்தத்தைப் போக்கும்வகையில் அவர்களுக்கு உரிய நேரத்தில் யோகா போன்ற பயிற்சிகளை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேசமயம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்குவதுடன் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தைப் பின்பற்றி பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரியர் தேர்வு! - அரசிடம் அனுமதி கேட்கும் அண்ணா பல்கலைக்கழகம்!