தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ராகிங்கில் ஈடுபட மாட்டேன்' - ஆன்லைனில் உறுதி மாெழி தாக்கல் செய்ய உத்தரவு - ராகிங் தடுப்பு சட்டம்

உச்சநீதிமன்றதின் தீர்ப்பு, பல்கலைக்கழக மானியக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் அனைத்து வகை மாணவர்களும் ராகிங்கில் ஈடுபடமாட்டேன் என ஆன்லைன் மூலம் உறுதி அளிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

By

Published : Dec 14, 2021, 7:00 PM IST

சென்னை:அண்ணாப் பல்கலைக் கழகம் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.

அக்கடிதத்தில், 'பல்கலைக் கழக மானியக்குழுவின் உத்தரவின் படியும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் ராகிங் தடுப்பு சட்டத்தின் படி, ராகிங்கில் ஈடுப்பட மாட்டேன் என ஆன்லைன் மூலம் பிராமண பத்திரத்தை மாணவரும், அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரும் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் www.antiragging.in or www.amanmovement.org என்ற இணையதளங்களில் பதிவு செய்து அதையொட்டி வரும் மின்னஞ்சலை கல்லூரி, பல்கலைக்கழக சிறப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் ஆன்லைனில் அளிக்கும் பிரமாண பாத்திரத்தை பெற்று அனுப்ப வேண்டும். ராகிங் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதற்கான கண்காணிப்பு அலுவலர்களின் தொடர்பு எண்களை வகுப்பறைகள், நூலகம், உணவுவிடுதி, தங்கும் விடுதிகள் மற்றும் பொது இடங்களில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைகழகம் கடிதம்
மேலும், ராகிங்கில் ஈடுப்படமாட்டேன் என்ற உறுதி மாெழியை ஆன்லைனில் அளிப்பது குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:10 வகுப்புத் துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details