தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’ஏஞ்சலினா’ பாடல்களுக்கு நல்ல வரவேற்பு - d iman

இயக்குனர் சுசீந்திரன் - டி.இமான் கூட்டணியில் சமீபத்தில் உருவான 'ஏஞ்சலினா' படத்தின் பாடல்கள் இரு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இயக்குனர் சுசீந்திரன்

By

Published : Jun 7, 2019, 9:00 AM IST

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் க்ரிஷா க்ரூப், சரண் சஞ்சய், சூரி, தேவதர்ஷினி ஆகியோர் நடித்திருக்கும் ஏஞ்சலினா திரைப்படம் காதல் அம்சங்களை கொண்டு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகிறது. இந்தப் படத்தை ஆறாம் திணை ஃபிலிம்ஸ் சார்பில் கே.வி.சாந்தி தயாரித்திருக்கிறார்.

இயக்குனர் சுசீந்திரன் படப்பிடிப்பின்போது

இது குறித்து அலெக்ஸாண்டர் கூறும்போது,

"இயக்குனர் சுசீந்திரன் திரைப்படங்கள் எப்போதுமே திரை வணிகர்களின் பட்டியலில் ஒரு வலுவான நிலையை அடைய தவறியதே இல்லை. அழுத்தமான கருவை மிக நேர்த்தியாக வழங்கும் அவரது சூத்திரம்தான் அவரை தொடர்ந்து வெற்றியாளராக வைத்திருக்கிறது.

ஏஞ்சலினா திரைப்படத்தின் நச்சத்திரங்கள்

புதுமுகங்களை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து, சிறப்பான திரைப்படங்களை தொடர்ச்சியாக வழங்கிய இயக்குநர்களில் மிக முக்கியமானவராக அவர் இருக்கிறார். அந்த வகையில் "ஏஞ்சலினா" படம் தொடக்கத்தில் இருந்தே கவனத்தை ஈர்த்துள்ளது, வண்ண மயமான, இளமையான திகிலூட்டும் அம்சங்களை கொண்ட அற்புதமான கதையை ஏஞ்சலினா கொண்டுள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details