தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'சுற்றுச்சூழலை பாதிக்காத கண்டுபிடிப்புகளை மாணவர்கள் கண்டுபிடியுங்கள்' - அன்பில் மகேஷ் பொய்யாமொழி - சென்னை மாவட்ட செய்திகள்

சுற்றுச்சூழலை பாதிக்காத கண்டுபிடிப்புகளை மாணவர்கள் கண்டுபிடியுங்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடம் கேட்டுள்ளார்.

ஆய்வுகூடம் திறப்பு
ஆய்வுகூடம் திறப்பு

By

Published : Jun 25, 2022, 9:46 PM IST

சென்னை: குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் விவசாயம் குறித்த கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகூடம் திறக்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், "மாணவர்கள் கேள்விகளை கேளுங்கள். நீங்கள் நீங்களாக இருங்கள். நாங்கள் சொல்வதை திருப்பி சொல்வதற்காக பள்ளிகள் இல்லை. நீங்கள் அதிகமாக சிந்திக்க வேண்டும்.

ஆய்வுகூடம் திறப்பு

வாங்கக்கூடிய மதிப்பெண் மட்டும் உங்களை மதிப்புடையவனாக்கவதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதாபிமானத்தை வளர்க்கிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள். மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மனிதாபிமானத்தையும் வளர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:12ஆம் வகுப்புக்கு அடுத்து என்ன படிக்கலாம்..? எங்கு படிக்கலாம்..? வல்லுநர்கள் வழங்கிய ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details