இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”சேலம் மாவட்டம் ஸ்ரீரங்காய் காடு கிராமத்தைச் சேர்ந்த, இந்திய ராணுவ ஹவில்தார் மதியழகன், காஷ்மீரில் பாகிஸ்தான் படையினருடன் நடந்த சண்டையில் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
ராணுவ வீரர் மதியழகனுக்கு டிடிவி தினகரன் இரங்கல்! - ராணுவ வீரர் உயிரிழப்பு
சென்னை: பாகிஸ்தானுடனான துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மதியழகனுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
dinakaran
நாட்டுக்காக அவரை இழந்திருக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதியழகனின் தியாகத்தை இந்தத் தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும் ” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்