மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 18 தொதிகளுக்கான இடைத்தேர்தலுக்காக திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவித்துள்ளன. மேலும் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன. ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் இருந்துவந்தது.
அமமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தினகரன் - அமமுக தேர்தல் அறிக்கை
சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி அமமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி அமமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
அதில்,டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிகக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும், தமிழ்நாட்டுக்கு என தனி செயற்கைக் கோள் ஏவப்படும், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் கைவிடப்படும், கிராமப்புறங்களில் இளைஞர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்படும், 60 வயது நிரம்பிய ஆண், பெண், விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 4,000 வழங்கப்படும்என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.