தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறையில் முருகனுடன் நளினி சந்தித்துப் பேச அனுமதி கோரி ஆட்கொணர்வு மனு!

சென்னை: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்தித்துப் பேச நளினிக்கு அனுமதி வழங்கக்கோரி, அவரது தாயார் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

mother
mother

By

Published : Jun 17, 2020, 6:37 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும், சிறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும்.

ஆனால், கடந்த மூன்று மாதங்களாக நளினியையும், முருகனையும் சந்தித்துப் பேச சிறை அலுவலர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால், கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் சிறைக்குள்ளேயே, முருகன் தொடர் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையினை வழங்க வேண்டும் எனவும், நளினியும்-முருகனும் சந்தித்துப் பேச அனுமதி வழங்கக் கோரியும், நளினியின் தாய் பத்மா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

முருகன்

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சீனத் தயாரிப்புகள் புறக்கணிப்படும் - தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை

ABOUT THE AUTHOR

...view details