தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மூன்று அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு அரசாணை - மூன்று அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு

மூன்று அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Allotment of additional portfolios to three Ministers gazette released by Government of Tamil Nadu
Allotment of additional portfolios to three Ministers gazette released by Government of Tamil Nadu

By

Published : Jan 12, 2022, 3:55 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 3 அமைச்சர்களுக்கு முதல்முறையாக கூடுதல் துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை வெளியிட்டு உள்ளார்.


அந்த அரசாணையின்படி, 'தொழில்துறை அமைச்சரால் கையாளப்பட்ட சர்க்கரைத்துறை, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை
விமான நிலையங்கள் - போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்வையிடுவதற்குப் பதிலாக, அந்த துறையை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்து பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) உள்ளடங்கிய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'
மூன்று அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு
என தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசு ஆணையில் தெரிவித்துள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details