கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள் குறித்த கருத்தரங்கம், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி, மாநில தலைவர் ஜி.கே.மணி, ஆகியோர் இணையவழியில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அன்புமணி, ”அனைத்து சாதிக்காகவும் போராடுகிற ஒரே கட்சி பாமக தான். ஆரம்ப காலத்தில் நாம் போராடவில்லை என்றால் இன்று வரை 27 % இட ஒதுக்கீடு வந்திருக்காது. 105 சமுதாயங்களை இணைத்து 20% இடஒதுக்கீட்டை கலைஞர் கொடுத்தார். அதில் நமக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. திடீரென்று இன்று நாம் போராடவில்லை, கடந்த 40 ஆண்டு காலமாக இட ஒதுக்கீட்டிற்காக போராடி வருகிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய ராமதாஸ், “இதுவரையில் எத்தனையோ கடிதங்களை முதலமைச்சருக்கு அனுப்பி விட்டோம். எதற்கும் இதுவரை பதிலில்லை. பேருக்கு கமிஷன், குழுக்கள் அமைக்கின்றார்களே தவிர, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த ஒரு உயர் பதவிகளிலும் வன்னியர்கள் இடம்பெறவில்லை. அனைத்திலும் நாம் ஒதுக்கப்பட்டுள்ளோம்.