தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர உத்தரவு! - பள்ளிக்கல்வித்துறை

சென்னை: அனைத்து ஆசிரியர்களும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கு வர உத்தரவு
பள்ளிக்கு வர உத்தரவு

By

Published : Jul 29, 2021, 10:55 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர் சேர்க்கைக்காக தலைமை ஆசிரியர்களும், அவர்களுக்கு உதவியாக ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்றல் மற்றும் அவற்றை உறுதி செய்தல், மாணவர்களுக்கான பாடங்களை தயாரித்தல் ஆகிய பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அந்த உத்தரவில், கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமல்லாது மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க Google meet, Zoom, teams, whats app, Telegram போன்ற இணைய வழி கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் தாங்களாக முன்வந்து மேற்கொள்வது பாராட்டுக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைப் பணி, பள்ளி கால அட்டவணை தயாரித்தல், விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்குதல், வகுப்பறை மற்றும் வளாகங்களை தூய்மை செய்தல், கல்வி தொலைக்காட்சியில் மாணவர்கள் கற்றுக் கொண்ட பாடங்களுக்கு ஏற்றார் போல அசைன்மென்ட் கொடுத்து மதிப்பீடு செய்தல், மதிப்பீடு செய்த விவரங்களை பதிவேட்டில் பதிவேற்றம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பணிக்கு வரவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய், சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோர், இருதய நோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளோர் மற்றும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பள்ளிக்கு வருவதிலிருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விலக்கு அளிக்கலாம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details