தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் - அரசாணை வெளியீடு! - சென்னை செய்திகள்

சென்னை: மாநில பாடத்திட்டத்தில் படித்த 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை

By

Published : Feb 27, 2021, 11:11 AM IST

Updated : Feb 27, 2021, 12:41 PM IST

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில்,

"தமிழ்நாட்டில் கரோனா தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு வழிகாட்டுதலின்படி 2020 மார்ச் 25ஆம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 2020-21ஆம் கல்வி ஆண்டில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டன.

2020-21ஆம் கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் மட்டுமே கல்வி பயின்று வந்த நிலையில், அதனால் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

இந்நிலையில் சட்டப்பேரவையில் பிப்ரவரி 25ஆம் தேதி முதலமைச்சர் விதி எண் 110இன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டும், பெற்றோரின் கோரிக்கையை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்து 2020-21ஆம் கல்வி ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வுகள், பொதுத்தேர்வு ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

மேலும், மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் வெளியிடப்படும். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோர், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், கல்வியாளர்கள் கருத்துகளை பரிசீலித்தும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அரசு உத்தரவிடுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2020-21ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வு, 10, 11ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெறுகின்றனர்.

Last Updated : Feb 27, 2021, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details