தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடல்

சென்னை: அரசு உத்தரவின்படி வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, அனைத்து இறைச்சிக் கூடங்களும் 28.01.2021 அன்று மூடப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடல்
வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடல்

By

Published : Jan 23, 2021, 2:50 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

"சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற 28.01.2021 (வியாழக்கிழமை) அன்று வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூட வேண்டும்.

இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு உத்தரவின்படி கண்டிப்பாக 28.01.2021 (வியாழக்கிழமை) அன்று முழுவதும் அனைத்து இறைச்சிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் எனவும், அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இறைச்சி கடைகளில் விற்பனை மந்தம்: வியாபாரிகள் கவலை

ABOUT THE AUTHOR

...view details