தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை உயர் நீதிமன்ற அனைத்து வாயில்களும் மூடல் - பாரிமுனை

சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து வாயில்களும் இன்றிரவு முதல் நாளை இரவு வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Dec 4, 2021, 6:16 PM IST

சென்னை: சென்னை உயர்நீதி மன்றம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் 107 ஏக்கரில் கட்டப்பட்டது. இதனால் ஜார்ஜ்டவுன், பாரிமுனை மற்றும் பூக்கடை பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயர்நீதி மன்றத்தைச் சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது.

நாளடைவில் மக்கள் உயர்நீதி மன்ற வளாகத்தைச் சுற்றி செல்வது அதிக தூரமாக இருப்பதாக கருதி உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர்.

இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், எதிர்காலத்தில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒருமுறை மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மூடப்படும் என்று அறிவித்தது.

இந்த நடைமுறை ஒவ்வொரு வருடத்தின் டிசம்பர் முதல் வாரத்தின் சனிக்கிழமையில் கடைப்பிடிப்பது வழக்கம். அதன்படி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும் என்றும் இந்த நேரத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என யாருக்கும் நீதிமன்றத்தில் நுழைய அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details