இது தொடர்பாக, அனைத்துத் தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், ”தமிழ்நாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும், கல்லூரி இணைப்புக்கான ஆய்வுகள் பிப்ரவரி கடைசி வாரத்தில் தொடங்கவுள்ளன.
இதற்காக அனைத்து கல்லூரிகளிடமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் நோக்கம் ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்வித்தகுதி போன்றவற்றை ஆய்வுசெய்வதே ஆகும்.
இந்த நிலையில் தற்போது பல கல்லூரிகள், ஆசிரியர்கள் தேவை என விளம்பரங்கள் செய்கின்றன. விளம்பரங்கள் வாட்ஸ்அப் மூலமாகவும் பரப்பப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலி விளம்பரங்கள் ஆகும். நேர்காணலுக்கு வரும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை மட்டும் கையகப்படுத்தி, ஆய்வின்போது அவர்களை வேலைக்கு அமர்த்தியது போல போலியாகக் கணக்குக் காட்டவே, இந்தச் சதி நடக்கிறது.