தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓய்வுபெற்ற டிஎஸ்பி காரில் மதுக் கடத்தல்: சினிமா தயாரிப்பாளர் கைது! - போக்குவரத்து காவல்துறையினர்

சென்னை: மதுரவாயல் அருகே ஓய்வுபெற்ற டிஎஸ்பி காரில் மதுபாட்டில்களை கடத்திவந்த சினிமா தயாரிப்பாளரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்
மதுபாட்டில்கள் பறிமுதல்

By

Published : Jun 30, 2020, 5:00 PM IST

சென்னை மதுரவாயல் அருகே போக்குவரத்து காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று வந்தது.

அந்தக் காரை மடக்கிய காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், காரில் 248 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரிலிருந்த இருவரிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், படப்பையைச் சேர்ந்த கலைச்செல்வம் என்பதும், இவர் ஒரு சினிமா தயாரிப்பாளர் என்பதும் தெரியவந்தது. கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனை வைத்து ’தாதா 85’ என்ற படத்தை இவர் தயாரித்தாகக் கூறப்படுகிறது.

மற்றொருவர் முகப்பேரைச் சேர்ந்த பல் மருத்துவ நிபுணர் ஆனந்தராஜ் என்பதும், இருவரும் படப்பையிலிருந்து மதுபாட்டில்கள் வாங்கிவந்துள்ளனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் படப்பையில் உள்ள ஓய்வுபெற்ற துணை காவல்கண்காணிப்பாளர் நசிர் பாஷாவிற்கு சொந்தமானது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்
இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைதுசெய்து, மது கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் மது பாட்டில்களை போக்குவரத்து காவல் துறையினர் அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details