சென்னை: கடந்த ஜனவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அதிமுகவில் தன்னை இணைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆடியோ பதிவுகள் மூலம் தனது ஆதரவாளர்களுடன் பேசி வந்த சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் சென்று மரியாதை செலுத்தி விட்டு தனது ஆதரவாளர்களை சந்திப்பதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் சென்று மலர் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது,"என் வாழ்நாளில் அதிகமான நாள்களை ஜெயலலிதாவுடன் கழித்திருக்கிறேன். ஆனால், ஜெயலலிதாவின் மறைவை அடுத்துள்ள ஐந்து வருட காலத்தில், என் மனதில் பெரும் பாரம் பற்றிக்கொண்டது.
முன்னாள் தலைவர்களுடனும்...
என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா சமாதியில் இன்று (அதாவது அக். 16) இறக்கி வைத்துவிட்டேன். அம்மாவும், தலைவரும் (எம்ஜிஆர்) என்றுமே மக்கள் நலனை கருத்திற்கொண்டு செயல்பட்டவர்கள். தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்தை நினைத்து பயணித்தவர்கள்.