தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசித்த பின் உயர் நீதிமன்றம் திறப்பு - ஏ.பி.சாஹி!

சென்னை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசித்த பிறகே சென்னை உயர் நீதிமன்றம் திறக்கப்படும் என தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்துள்ளார்.

justice
justice

By

Published : Aug 5, 2020, 7:23 PM IST

ஊரடங்கால் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில், காணொலி காட்சி மூலம் மட்டுமே வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தை திறக்கவும், அனைத்து வழக்குரைஞர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வரவும், ஆன்லைனில் வழக்குகளை விசாரிக்கும் போது தள்ளுபடி செய்யாமல் வாய்தா அளிக்கவும் கோரி, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் இன்று(ஆக.5) சந்தித்தனர்.

அப்போது, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தியபின், உயர் நீதிமன்றத்தை திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாக, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், வழக்குரைஞர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, அரசு தலைமை வழக்குரைஞரை நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வழக்குரைஞர்கள் சங்க துணைத்தலைவர் சுதா, செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பெண் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் லூயிஸால் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும் அப்போது உடனிருந்தனர்.

இதையும் படிங்க: திமுக எம்எல்ஏவிற்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பா? காவல்துறை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details