தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 17, 2020, 3:12 PM IST

ETV Bharat / city

கரோனா அச்சுறுத்தல் - சிறைகளுக்குக் கட்டுப்பாடு

சென்னை: கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து தமிழ்நாடு சிறைத் துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

restrictions
restrictions

தமிழ்நாடு சிறைத் துறை சார்பில் கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து சிறைக் கைதிகளைச் சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிறைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:

  • ஒருவர் சிறையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தி உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.
  • அனைத்து சிறைவாசிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் உள்ள சிறைவாசிகளை தற்காலிக தடுப்புக் காப்பு அறைகள் அமைத்து அடைக்க வேண்டும்.
  • சிறைவாசிகளுக்கு சோப்புகள் வழங்கவும், அவ்வப்போது கைகளைக் கழுவும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். அவை முறையாகக் கவனிக்கப்படவும் வேண்டும்.
  • கைதிகளை சந்திக்கவரும் வழக்குரைஞர்கள் சிறையினுள் அனுமதிக்கப்படும் முன், கைகளை சோப் மூலம் சுத்தம் செய்துகொண்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும். வழக்குரைஞர் மற்றும் கைதிகளுக்கு இடையே சுமார் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
  • வழக்குரைஞர், சிறைவாசி இருவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் தொடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
  • யோகா, தியானம் போன்றவற்றைத் தவிர அனைத்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி சம்பந்தமான பார்வையாளர்களை, ஒரு மாதக் காலத்திற்கு சிறையினுள் அனுமதிப்பது நிறுத்திவைக்கப்பட வேண்டும்.
  • பணி நேரத்தில் உள்ள அனைத்துக் காவலர்கள், அலுவலர்களுக்கு முகக்கவசம் வழங்க வேண்டும்.
  • பெரும்பாலான நேரங்களில் சிறைவாசிகளை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்துவதைத் தவிர்த்து, காணொலி காட்சி மூலம் முன்னிலைப்படுத்த வேண்டும்.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அவசர வழக்குகளுக்கு மட்டுமே விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம் முடிவு

ABOUT THE AUTHOR

...view details