குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர்.
இஸ்லாமிய தலைவர்களுக்கு தலைமை செயலாளர் அழைப்பு - இஸ்லாமிய தலைவர்களுக்கு தலைமை செயலாளர் அழைப்பு
சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக ஆலோசிக்க இஸ்லாமிய தலைவர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார்.
Shanmugam
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான ஐயப்பாடுகளை கண்டறியும் வகையில் இஸ்லாமிய சமுதாய தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
நாளை மாலை நான்கு மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்க உள்ள இந்தக் கூட்டத்தில் இஸ்லாமிய தலைவர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.