நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு இடத்தை பெற்று தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் "எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கட்சியில் வெவ்வேறு கருத்துகளை உடையவர்களாக இருப்பதால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வரை முடிவெடுக்க முடியவில்லை" என்று அதிமுக மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும்! என்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.
அதிமுக செய்தித் தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது! - ஊடகம்
சென்னை: ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என அதிமுக செய்தித் தொடர்பாளர்களுக்கு அக்கட்சியின் தலைமை விதித்திருந்த தடை நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக
அதன்பின் அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் யாரும் மறு உத்தரவு வரும் வரை ஊடகங்களில் பேசக்கூடாது, ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவிட்டு அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் மீண்டும் வழக்கம்போல் ஊடங்களுக்குப் பேட்டி உள்ளிட்டவை அளிக்கலாம் என்று அந்த தடையை நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.