தமிழ்நாட்டில் காலியாக இருந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கானத் தேர்தலில் திமுக, அதிமுகவைச் சேர்ந்த தலா மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ள அதிமுகவின் மு. தம்பிதுரை, கே.பி. முனுசாமி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே. வாசன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனைச் சந்தித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.