சென்னை :பேரறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவுநாள் பிப்., 3ஆம் தேதி வருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் பிப்., 3ஆம் தேதி புதன்கிழமை பேரறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்தநிகழ்வில் அதிமுகவின் முன்னாள், இன்னாள் மக்களைவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், பல்வேறு நிலையில் பொறுப்பில் இருக்கும் கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள், பொதுமக்கள் அரசு அறிவித்திருக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கலந்து கொள்ள வேண்டும்.